top of page
Search

தொடர் கொலைகளில் மரபணுவின் மாயாஜாலம்! By சிவா.

  • melbournesivastori
  • Jan 23, 2021
  • 8 min read

நமக்கு எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வரை மற்றவர்களுக்கு நடக்கும் அசம்பாவிதங்கள் செய்திகளே. அசம்பாவிதங்கள் நடைபெறுவது பொதுவாக சட்ட திட்டங்களை மீறுவதனாலேயே… சட்டதிட்டங்களை கட்டுக்குள் வைத்திருப்பது காவல்துறையின் தலையாய கடமை.. இது வளர்ந்த நாடுகளில் காவல் துறைக்கு பெரும் பொறுப்பாகும்… வளரும் நாடுகளில் உள்ள ஊழல், அரசியல் தலையீடு வளர்ந்த நாடுகளில் இல்லாமையே இதற்கு பெரும் காரணம்.. மேலும் குற்றவாளிகளை என்றுமே தப்பிக்க விடக்கூடாது என்ற எண்ணத்தில் வளர்ந்த நாடுகளில் உள்ள கோல்ட்கேஸ் டிவிஷன் விசேஷமான ஒரு துறை….. பரபரப்பே இல்லாமல் ஆமை போல் வூர்ந்தாலும் அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்தில் நடைபெறும் ஆராய்ச்சிகளை போன்றது இங்கு நடைபெறும் விசாரணைகள். இங்கு நான் கூறப் போகும் சம்பவங்கள் இந்த நாட்டையே பீதியில் ஆழ்த்தியவை….. இது முழுக்க முழுக்க உண்மை சம்பவமே என்றாலும் நடைபெறும் இடமும் இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களும் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன. இதில் சம்பவங்களோ கதாபாத்திரங்களோ நம்மை பாதித்தாலும்… “அறிவியல் முன்னேற்றம் குற்றம் செய்தோரை நின்று கொல்லும்” என்று ஒரு புது மறைக்கு உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.

1995 ஆம் ஆண்டு ஜனவரியில் டேண்டினோங் காவல்துறைக்கு வந்த புகார் எல்லாம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அமைதியாக இருந்த காலகட்டத்தில் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது…… 17 வயது இளம்பெண் வீட்டிற்கு நடந்து செல்லும்போது கடத்தப்பட்டு அருகிலிருந்த கல்லறையில் கற்பழிக்கப்பட்டது பிறகு தெய்வாதீனமாக தப்பித்து வந்த அந்தப் பெண் கொடுத்த புகார் தான் அது….கண்கள் கட்டப்பட்டு இருந்ததால் அந்தப் பெண்ணால் குற்றவாளியை அடையாளம் காண முடியவில்லை…..

இதுவரை நடைபெறாத அதிர்ச்சி சம்பவம் இது என்பதால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்று காவல்துறை முழுமனதாக நம்பியது….. அந்தப் பகுதியில் வரும் செய்தித்தாளில் மட்டுமே இந்த நிகழ்ச்சி பற்றி வந்தது…. மக்களும் நம்பினார்கள் ஓரிரு வாரங்களில் காவல்துறை இதை கண்டுபிடித்து விடும் என்று… காவல்துறையின் நடைமுறைப்படி அந்தப் பெண்ணின் நக இடுக்குகளில் உள்ள அழுக்குகளையும் அணிந்திருந்த உடையில் பட்டிருந்த மண் துகள்களையும் சேகரித்துக்கொண்டு குற்றவாளியை கண்டுபிடிக்க தங்களது வேட்டையை தொடங்கினர்… நாட்கள் வாரங்கள் மாதங்கள் சென்றன…..

1996 ஜனவரி 27 ஆம் நாள்… மென்டோன் காவல் துறைக்கு ஒரு புகார் வந்தது..

முன்தினம் தன் தோழிகளுடன் நடன விருந்திற்கு சென்ற தான்யா என்ற 19 வயது பெண் வீடு திரும்பவில்லை என்று புகார் தான் அது.. காவல்துறை தாமதிக்காமல் உடனடியாக செயலில் இறங்கினார்கள்…

தான்யா நடன விருந்து முடிந்ததும் டாக்சிக்கு போன் செய்தது தெரிய வந்தது ஆனால் டாக்ஸி தான்யா சொன்ன இடத்தில் வரும்போது அவள் அங்கு இல்லை. காவல்துறையின் தலைவலி அங்கிருந்து ஆரம்பமானது.

இது நடந்தது 24 வருடங்களுக்கு முன்பு ஆதலால் நீங்கள் தற்போது இருக்கும் எல்லா வசதிகளையும் அப்போது எதிர்பார்க்க முடியாது. காவல்துறை இங்கு அங்கு என்று இன்றி எல்லா இடத்திலேயும் எல்லா விதத்திலும் தேடினார்கள்….. ஆங்கிலத்தில் டெட் எண்ட் என்று சொல்வார்களே அது போன்று எல்லா விசாரணையும் தொடங்கிய இடத்திலேயே வந்து நின்றன. ஒரு சிறு துப்பு கூட கிடைக்காமல் மாதங்கள் நான்கு ஓடின.

அதே வருடம் ஜூன் மாதம் 9ஆம் தேதி மென் டோன் காவல்துறைக்கு அதேபோன்று புகார் ஒன்று வந்து சேர்ந்தது….. இந்தமுறை 23 வயதான நேடலி என்ற பெண் காணவில்லை என்று…. பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த பெண்…. எல்லோராலும் எப்பொழுதுமே மகிழ்ச்சியுடன் எல்லோராலும் மதிக்கக் கூடிய ஒரு பெண். காவல் துறைக்கு மிக அதிக அழுத்தங்கள் வந்தது வந்த வண்ணம் இருந்தது.. காவல்துறை இப்போது முடிவு செய்துவிட்டார்கள் இது தொடர் கொலையாக இருக்கக்கூடும் என்று. ஜனவரி மாதம் காணாமல் போன தான்யாவின் விசாரணை எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது கவலைக்குரியதாக தெரிந்தது.

இந்த சமயத்தில்தான் காவல்துறை1 தன்னிடமிருந்த எல்லாவித இயந்திரங்களையும் முடுக்கி விட்டது…. ஒட்டுமொத்தமாக நகரத்தில் உள்ள எல்லா போலீஸ் அதிகாரிகளும் இதில் முழுமூச்சாக ஈடுபட்டனர். தானியாவின் இருப்பிடமே தெரியாமல் இருந்தது எல்லோருக்கும் மனதில் ஒரு மூலையில் பெரிய வருத்தத்தை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தது.

அந்த வருத்தத்தில் நெட்லியின் மர்மமும் சேர்ந்துகொண்டது.

நெட்டலி காணாமல்போன புகாரை நகர காவல்துறை தனக்கு கொடுக்கப்பட்ட சவாலாகவே எடுத்துக்கொண்டது.

காவல்துறை கூட்டத்தில் ஒரே ஒரு அதிகாரி மட்டும் கூறினார்…. இதற்கான சாட்சியங்கள் எங்கேயோ ஒரு பெட்டியில் நம்மிடத்தில் தான் இருக்கிறது என்று. அது பிற்காலத்தில் உண்மையாக போகிறது என்று அப்போது அந்த அதிகாரிக்கு தெரியாது.

சில நாட்களுக்குள்ளாகவே நெட்லியின் உடலை காவல்துறை கண்டுபிடித்து விட்டது, ஆனால் அதை பற்றிய எந்த விவரங்களையும் காவல்துறை கூற மறுத்துவிட்டது. பத்திரிக்கை துறையின் சில கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை அது ஒரு கேள்வி, உடல் புதைக்கப்பட்டு இருந்ததா? உடல் புதைக்கப்பட்டு இருக்கவில்லை ஆனால் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு இருந்தது என்று மட்டும் தெரிவித்தனர்.

நெட்டில் என் வீட்டிற்கு காவல்துறை சென்று இந்த செய்தியை தெரிவிக்க முற்படும்போது… நேற்றைய பெற்றோருக்கும் சகோதரிக்கும் தெரிந்து விட்டது இது துன்ப செய்திதான் என்று. இருந்த சிறு சதவிகித நம்பிக்கையும் தவிடுபொடியானது நெட்லியின் பெற்றோர்களை துன்பத்தின் எல்லைக்கே எடுத்துச் சென்றது. தந்தை இறக்கும் வரை தூக்கமின்மையை துணையாகக் கொண்டு ஒவ்வொரு நாளும் வருந்தி துடித்தது பொதுமக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த சமயத்தில்தான் காவல்துறை மேக்ரோ என்ற துப்பறிய துரித குழுவை அமைத்தது. காவல்துறையின் இந்த முடிவு சிறந்த முடிவு என்று 1997 மார்ச்சில் காணாமல்போன ஜேமி என்ற பெண்ணின் புகார் வந்த போது தெரியவந்தது. ஜேமி ஒரு கல்லூரி மாணவி, சக தோழிகளுடன் விருந்திற்கு சென்று விருந்து முடியும்போது வீட்டுக்கு வரும் வழியில் காணாமல் போனாள். சக தோழிகள் ஆல் நம்பவே முடியவில்லை… எல்லோராலும் விரும்பப்படும் ஒரு சக மாணவி அவள் என்று ஒட்டுமொத்த கல்லூரியே தெரிவித்தது.

காவல்துறையின் ஒட்டுமொத்த குறிக்கோளும் இந்த தொடர் கொலைகளை கண்டுபிடிப்பதில் இருந்ததால் சில நாட்களிலேயே ஜெமின் உடலை நகரத்தின் வடக்கு புறம் 40 கிலோமீட்டர் தள்ளி கண்டுபிடித்தனர். நெட்லியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது நகரத்தின் தெற்குப் புறம் சுமார் 40 கிலோமீட்டர் தள்ளி… இரு உடல்களிலும் ஒரு குறிப்பிட்ட காயங்கள் கழுத்துப் பகுதியில் இருந்தன. இது கத்தியால் ஏற்பட்டிருக்கும் என்று காவல்துறை நம்பியது.

இதற்குப் பிறகுதான் நகரமே நடுங்கியது.. எந்தப் பெண்களையும் மாலை ஆறு ஏழு மணிக்கு மேலாக வெளியே அனுப்ப எந்த பெற்றோர்களும் முன்வரவில்லை…. இளைஞர்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்தது… எந்தவித துப்பும் கிடைக்காததால் போகும் வருவோரை ஒருவருக்கொருவர் சந்தேகப்படும்படியான மன அழுத்தத்தில் நகரம் இருந்தது.

இந்த சமயத்தில்தான் காவல்துறைக்கு மிகப்பெரிய துப்பு கிடைத்தது. அந்த விருந்தினர் விடுதிக்கு அருகில் ஒரு இளைஞர் தனியாக காரில் அமர்ந்து கொண்டு வேவு பார்ப்பதாக மேக்ரோ பிரிவுக்கு காவல்துறை தெரிவித்தது. அந்த இளைஞரின் பெயர் சார்லஸ்…. மேக்ரோ பிரிவு சார்லஸை தொடர்ந்து சில மாதங்களாக உன்னிப்பாக கவனிக்கத் துவங்கியது. அந்த சமயத்தில் சார்லஸ் தான் முதன்மை சந்தேகப்படும்படியான நபராக காவல்துறை பட்டியலில் இருந்தான். எந்தவித துப்பும் கிடைக்காமல் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இருந்த காவல் துறைக்கு இது பெரிய வரப்பிரசாதமாக இருந்தது… சார்லசும் அவனுடைய நடவடிக்கைகளால் இதற்கு எல்லாவற்றிலும் பொருத்தமாக இருந்தான். இரவு நேரங்களில் இரவு விடுதிகளின் அருகில் காரில் தனியாக வலம் வந்தது சந்தேகத்தை மென்மேலும் அதிகப்படுத்தியது. திடீரென்று ஒருநாள் காவல் துறையின் மேக்ரோ பிரிவு சார்லஸின் வீட்டை சூழ்ந்து அக்கு வேறு ஆணிவேராக ஆராய்ந்தனர். அந்த ரெய்டில் காவல்துறை எதிர்பார்த்த அளவிற்கு எந்தவித துப்பும் கிடைக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஒட்டுமொத்த நகர காவல்துறைக்கு கொடுத்தது. இறந்த நெட்லியின் சகோதரியின் தோழியின் உறவினன் சார்ல்ஸ் என்பதும் அவன் மிகவும் நல்லவன் என்பதும் நெட்டிலியின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. பத்திரிகை துறையினர் செல்லும் இடத்தில் எல்லாம் மடக்கி கேள்விக்கணைகளை தொடுத்து சார்லசை மன உளைச்சலில் எல்லைக்கே எடுத்துச்சென்றனர்.

சார்லஸின் ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது… குடும்பம் மட்டுமல்லாமல் சார்லசின் நண்பர்களும் ஒன்று போல ஒரு விஷயத்தை தெரிவித்தனர்.. சார்லஸ் மிகவும் நல்லவன், இந்த தொடர் கொலைகள் அவனை வெகுவாக பாதித்துள்ளது அதனால் நேரக் கூடிய ஆபத்தை பெண்களிடம் எச்சரிக்கவே அந்த இரவு வேலைகளில் சுற்றியதாக.

நேடலியின் குடும்பம் அதை முழுவதுமாக நம்பியது, ஏற்றுக்கொண்டது.

ஆனால் காவல் துறையோ இவைகளை நம்ப வில்லை. ஓரளவுக்கு முடிவும் செய்துவிட்டனர் சார்லஸ் தான் குற்றவாளி என்று.

இந்த சமயத்தில் தான் பரவலாக பேச்சு ஒன்று அடிபட்டது…. ஓய்வு பெற்ற சிறந்த காவல்துறை அதிகாரிகள் இங்கு மட்டும் இல்லாமல் மற்ற மேலை நாடுகளிலும் இதைப்பற்றி கருத்துக்களை கூற ஆரம்பித்தனர். அதில் மிக முக்கியமான கருத்து, காவல்துறை தன்னுடைய விசாரணையை வேறு கோணத்தில் அணுக வேண்டும் என்றும். இதுபோன்ற தொடர் கொலைகாரன் மற்ற பொது மக்களைப் போல தான் வாழ்வான் என்றும். சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிய மாட்டான் என்றும் பல பல கருத்துகளை கூறினார்கள்.

அரசாங்கத்தின் அழுத்தமும் காவல்துறையின் மீது அதிகமாக பதிந்தது. அந்த சமயத்தில்தான் 2004ஆம் ஆண்டு அந்தப் பகுதி செய்தித்தாள் இந்தச் செய்தியினை மீண்டும் பிரசுரித்து கேள்விக்கணைகளை தொடுத்து. இது காவல்துறையின் மேக்ரோ பிரிவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பொதுமக்களின் அழுத்தமும் அரசாங்கத்தின் அழுத்தமும் வேறு வழியில்லாமல் வேறு கோணத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதே ஆண்டில் நவம்பர் மாதம் அரசாங்க தொலைக்காட்சியும் இதனைப் பற்றிய சிறு டாக்குமெண்டரியை வெளியிட்டது. வேறு வழியில்லாமல் காவல்துறை எல்லாவித நல்ல யோசனைகளையும் செயல்படுத்த முன்வந்தனர்.

மேக்ரோ பிரிவிற்கு வழிகாட்டும் குழுவை அமைத்தனர், அதில் தன்நாட்டைச் சேர்ந்த இரு துப்பறிவாளர்களும், அமெரிக்காவிலிருந்து ஒரு மனோதத்துவ நிபுணரும், இங்கிலாந்திலிருந்து 2 பாரன்சிக் விஞ்ஞானிகளும் அடங்கினர். இது ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது இந்த விசாரணையில். இந்தப் பிரிவிற்கு காவல்துறையும் அரசாங்கமும் முழு ஒத்துழைப்பையும் முழு அதிகாரத்தையும் கொடுத்தது. அவர்கள் புதிய கோணத்தில் எல்லா சாட்சிகளையும் அணுகினர்.

துப்புக்களாக எடுத்து வைத்திருந்த மரபணு மாதிரிகளை அதி நவீன விஞ்ஞான பரிசோதனை கூடங்களில் ஒப்பிட ஆரம்பித்தனர். அந்த சமயத்தில்தான் இரு பெண்களின் உடல்களில் அருகில் இருந்து சேகரிக்கப்பட்ட சில நூல்கள் இவர்களின் பார்வையில் பட்டது. அவைகள் அந்தப் பெண்கள் உடுத்தியிருந்த உடைகளுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் இருந்தது. அப்போது தான் இந்த பிரிவு ஒன்றை கவனித்தது.. இந்தத் சாட்சிய துப்புகளை மேக்ரோ பிரிவு ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதது. அந்தப் பிரிவில் இருந்த மனோதத்துவ நிபுணர் ஒன்றை அழுத்தம் திருத்தமாகக் கூறினார்… கண்டிப்பாக இந்தக் கொலைகாரன் இந்த இரண்டு பெண்களோடு நிறுத்தி இருக்கவும் அல்லது இவர்கள்தான் அவனது தொடக்கமாகவும் இருக்கமுடியுமென்று நம்பவில்லை என்பதை.

இது வரலாற்று சிறப்புமிக்க விசாரணை கோணமாக அமையும் என்று அப்போது அந்த மனோதத்துவ நிபுணருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை…..

அந்த மனோதத்துவ நிபுணரின் கருத்து மிக முக்கிய திருப்புமுனை கோணமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதுவே அந்த பகுதியில் நடந்த இது போன்ற எல்லாவிதமான சம்பவங்களையும் சாட்சியங்களையும் ஆராய துவங்கியது. இந்த புதிய குழு இந்த விசாரணை கோணத்தில் முழுமூச்சாக இறங்க துவங்கியது…. அதற்கு முன்பாக நடந்த எல்லாவித சம்பவங்களையும் சாட்சியங்களையும் ஒன்றுவிடாமல் அலச துவங்கியது. இருப்பினும் விசாரணை ஆமை வேகத்தில் ஊர்ந்தது….. நிதி மட்டும் ஆட்கள் பற்றாக்குறை இதற்கு காரணம்.

2008ஆம் ஆண்டு…… ஒரு இளம் துப்பறிவாளர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையின் மேற்பார்வையில் உள்ள சாட்சிய தொகுப்புக்களை விசாரிக்காமல் இருந்ததை கண்டுபிடித்தார். அதில் ஒன்றுதான் ஜேமி உடல் நக இடுக்குகளில் இருந்த துகள்கள் இதுவரை எந்த பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பாமல் சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் உறங்கிக் கொண்டிருந்தது. துரிதமாக வேலைகள் நடந்தது…. அந்த நக சுரண்டல்கள் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்ப பட்டது. வந்த பரிசோதனை முடிவில் அந்த நக சுரண்டல் துகள்களில் இரண்டு மரபணுக்கள் இருப்பது தெரியவந்தது. அதில் ஒன்று ஜேமியின் மரபணு மற்றது இனம் புரியா தெரியாத ஒரு ஆணின் மரபணு. முதல்முறையாக காவல்துறைக்கு மிக அழுத்தமான ஒரு துப்பு கிடைத்தது அது அடையாளம் தெரியாத கொலைகாரன் உடைய மரபணு. இந்த சமயத்தில்தான் காவல்துறை மிக துரிதமாக மற்ற சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தனர். மிகப்பெரிய அதிர்ச்சியான துப்பு அவர்களுக்கு கிடைத்தது… அதாவது 1995ஆம் ஆண்டு கல்லறையில் கற்பழிக்கப்பட்ட அந்த 17 வயதுப்பெண்ணின் நக இடுக்குகளில் கண்டெடுக்கப்பட்ட மரபணுவும் இதுவும் ஒன்று என்று. காவல்துறையும் மேக்ரோ பிரிவும் மற்றும் வழி நடத்த வந்த இந்த விஷயத்திலும் மிகவும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த நிலைக்கு வந்தனர். அந்த மகிழ்ச்சி நீண்ட காலத்திற்கு நிலைக்கவில்லை….. கொலைகாரன் உடைய மரபணு கிடைத்துவிட்டது ஆனாலும் கொலைகாரன் யார் என்று தெரியவில்லை. காவல்துறையை குற்றம் சொல்லியும் எந்தவித பயனும் இல்லை அந்த சம்பவத்திற்கு முன்பு முப்பது நாற்பது வருடங்களில் நடந்த சம்பவங்களின் சாட்சியங்களை பகுத்தறிய மிக அதிகமான நிதியும் ஆட்களும் தேவைப்பட்டது. 2015ஆம் ஆண்டு எல்லாவித யோசனைகளும் காலாவதியானது….. காவல்துறைக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

அந்த சமயத்தில்தான் அந்தப் பகுதியின் செய்தித்தாள் மீண்டும் ஒருமுறை இந்த இந்த சம்பவங்களின் தொகுப்பை வெளியிட்டது. அப்போது தான் பொது மக்களுக்கு தெரிய வந்தது அந்தக் கொலைக்கும் கல்லறை கற்பழிப்புக்கும் தொடர்பிருப்பது….

பொதுமக்களின் ஏகோபித்த மன அழுத்தத்தினாலும் கருதினாலும் அரசாங்கம் மேலும் நிதியையும் ஆட்களையும் இந்த விசாரணைக்கு அனுமதித்தது. புதிதாக சேர்க்கப்பட்ட துப்பறிவாளர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு சுற்றிலும் உள்ள மற்ற இடங்களில் சென்ற பத்து இருபது வருடங்களில் நடந்த ஆனால் முடிவுக்கு வராத எண்ணற்ற விசாரணைகளை ஆராயத் தொடங்கினர். அதில் ஒரு நிகழ்ச்சி அவர்களின் விசாரணையை ஆக்கிரமித்தது.

1980களில் சுமார் ஒரு மணி நேர கார் பயணத்தில் இருந்த அந்த ஒரு இடத்தில் ஒரு நாள் இரவு, ஒரு இளம்பெண்ணின் படுக்கை அறையில் ஒருவன் நுழைந்து அந்த இளம்பெண்ணின் வாயை துணியால் அடைத்த போது அந்த இளம்பெண் தன் தந்தையை கூக்குரலிட்டு அழைத்ததை கண்டு அவன் ஓடியது. ஆனால் ஓடியவன் செய்த பெரும் தவறு… ஓடிய அவசரத்தில் அவன் விட்டுச் சென்ற ஒரு எம்ராய்டரி செய்யப்பட்ட டீ சர்ட். அதை காவல்துறை மரபணு பரிசோதனைக்கு அனுப்ப கண்டுபிடிக்கப்பட்ட தருணம் இந்த விசாரணையில் மிக முக்கியம் வாய்ந்த தருணம். அதாவது அந்த டி ஷர்ட்டில் இருந்த மரபணுவும், இரு பெண்களின் நக இடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்ட மரபணுவும் ஒன்று என்று. இருந்தும் காவல்துறையின் ஆனால் அந்த மரபணு க்கு உரிய ஆணை யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதலால் 1988ல் இருந்து அந்தப் பகுதியில் நடந்த இதுபோன்ற அத்து மீறல்கள் பற்றிய கேஸ்களை ஆராய துவங்கினர்

அப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு வித்தியாசமான சம்பவம், பெண்ணின் நைட்டியில் ஒரு உருவம் ஒரு வீட்டின் கண்ணாடி ஸ்லைடிங் டோரை திறக்க முற்பட்டு முடியாமல் விட்டுச் சென்றது. அந்த ரேகையும் மற்ற ரேகைகளும் ஒத்துப் போனது.

இது காவல் துறைக்கு மிகப் பெரிய வெளிச்சத்தை தந்தது ஏனென்றால் அந்த வேலைகளுக்கு உரியவன் டோனால்ட் மால்கம் என்பவன். அந்தப் பெயர் அரசாங்க டேட்டாபேஸில் இருந்தது அவன் ஈடுபட்ட ஒரு சம்பவத்தினால். 1990ஆம் ஆண்டு.

அந்தப் பகுதியிலிருந்த மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவமனையில் பழுதாகி போன தொலைபேசி இணைப்பினை சரி செய்ய வந்த டெக்னீசியன் தனியாக இருந்த வயதில் மூத்த இரு குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணை கர்ச்சீப்பால் வாயடைத்து அருகிலுள்ள பாத்ரூமுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது…. அந்தப் பெண் தன்னுடைய எல்லா வலிமையையும் பண்படுத்தி முரட்டுத்தனமாக போராடியபோது அவளை விடுவித்து…. சுய நினைவுக்கு வந்தது போல அவன் சாரி சாரி என்று அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டது.

அந்த சம்பவத்தில் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் கொடுத்த புகாரில் அதிகமாக கவனத்தை எடுத்துக் கொள்ளாமல் டொனால்டை நீதி துறையும் தொலைபேசி நிறுவனமும் ஒரு எச்சரிக்கையோடு விட்டதும் அல்லாமல் அவன் வேலை செய்த தொலைபேசி துறை ஒரு வருடம் கழித்து அவனுக்கு பதவி உயர்வையும் அளித்துள்ளது தெரியவந்தது.

மிக முக்கியமான காலகட்டத்தை அடைந்துவிட்டதை காவல்துறை புரிந்துகொண்டது. மேக்ரோ பிரிவின் ஒரு சிறிய துப்பறிவாளர்களின் குழு டோனால்டை பின் தொடர் துவங்கியது…

மிக சரியான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது அவர்களுக்கு, அன்று டோனால்ட் சினிமாவுக்கு செல்ல… உடனே சென்ற துப்பறியும் குழு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த போது அந்த சந்தர்ப்பமும் அமைந்தது. டோனால்ட் ஒரு பாட்டிலில் ஸ்பிரைட் குடித்ததை கண்டனர்…

திக் திக் திக் என்ற அந்த நிமிடங்கள்….. அந்த பாட்டிலை விட்டுச் செல்வானோ அல்லது எடுத்துச் செல்வானோ என்று புரியாத குழப்பத்தில் இருந்தனர் அந்த துப்பறிவாளர்கள். அதிர்ஷ்டவசமாக கடவுளின் கிருபை பொதுமக்களிடம் இருந்தது… அவன் பாட்டிலை விட்டுச் சென்றதும் துப்பறிவாளர்கள் கை உறை அணிந்து கொண்டு அந்த பாட்டிலை ஒரு பிளாஸ்டிக் கவரில் பத்திரமாக எடுத்துச் சென்று மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மரபணு பரிசோதனை முடிவும் வந்தது…. காவல்துறையின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.. எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்தன… காலம் காலமாக தேடிய அந்தக் கொலைகாரன் டொனால்ட் என்று கண்டுபிடித்து விட்டனர். இது நடந்தது டிசம்பர் மாதம் 2016 ஆம் ஆண்டு.

உடனடியாக டோனால்ட் கைது செய்யப்பட்டான்… இந்தச் செய்தி நகரத்தை பேரிடியாக மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. இந்த செய்தி சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் பெரிதாக வரவேற்றது.

இப்போதுதான் காவல்துறைக்கு மிகப்பெரிய சவால் காத்திருந்தது… கொலைகாரனை கண்டுபிடித்தாகிவிட்டது ஆனால் அவனுக்குத் தகுந்த தண்டனையை நீதித்துறையில் வாங்கித்தர எல்லா காட்சிகளையும் துப்பு களையும் ஒருங்கிணைத்து சமர்ப்பிக்க வேண்டிய சவால் தான் அது.

காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது டொனால்டின் நடிப்பு எல்லோரையும் திகைக்க வைத்தது… நான் ஏன் இங்கு இருக்கிறேன் ஏன் என்னை கைது செய்தீர்கள் என்று பலப்பல அர்த்தமற்ற உண்மையற்ற கேள்விகளை கேட்க துவங்கினான். காவல்துறை அவனுடைய மரபணுக்கள் எல்லா சம்பவங்களிலும் கண்டெடுக்கப்பட்டதை கூறிய போதும் எல்லாவற்றையும் மறுத்தான்.

அவனுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் எல்லோருக்கும் மிகவும் ஆச்சரியமாகவே இருக்கும். அந்தப் பகுதியில் நடக்கும் விழாக்களில்… விளையாட்டுகளில்… கலந்து கொள்வது, சமூக சேவையில் ஈடுபடுவது மற்றும் அவனுடைய அருமையான அமைதியான முகம் இவைகளை இவனா செய்தது என்று தோன்ற வைக்கும்.

காவல்துறையை நினைக்க வைத்தது அவனுடைய கொலை தொடர் நின்ற தற்கான காரணம் கடைசி பெண் ஜெமியின் கடுமையான போராட்டமோ அல்லது அதற்குப் பிறகு அவனுக்கு கிடைத்த நிரந்தர வாழ்க்கையோ.

காவல்துறை கடுமையாக உழைத்தது எல்லாவித சாட்சியங்களையும் தொகுப்புகளையும் ஒருங்கிணைக்க.. அப்படியும் நீதித்துறைக்கு இந்த கேசி எடுத்துவர சில வருடங்கள் பிடித்தது.

கல்லறை பெண்ணிடம் மற்றும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பெண்ணிடமும் எடுக்கப்பட்ட அந்த நூலிழைகள் நேரடியாக அவருடைய வேலை சீருடையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அவருடைய காரில் இருந்து எடுக்கப்பட்ட நூல்களும் பொருந்தியது.

இந்த விசாரணை மிகவும் தாமதமாக இருந்தாலும் அக்டோபர் மாதம் 2019 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணை நடக்கும் போது பாதிக்கப்பட்ட பெண்களின் எல்லா குடும்பத்தாரும் நண்பர்களும் கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்து இருந்தனர்…. குறிப்பாக ஒன்று சொல்ல வேண்டும் என்றால் விசாரணையின் எந்தக் கட்டத்திலும் அவன் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தாரையும் மற்றவர்களையும் ஏறெடுத்தும் பார்க்காமல் ஏதோ ஒரு வெள்ளைத் தாளில் ஒரு பென்சிலால் எதையோ கிறுக்கி கொண்டிருந்தான். தவறியும் ஒரு முறை கூட அவன் பேசவில்லை. கூர்ந்து கவனித்து கொண்டிருப்பவர்களுக்கு அவன் கோர்ட் நடைமுறைகளை கவனிக்கிறனா என்றே புரியவில்லை… இவனின் வாழ்க்கை நகரத்தின் இருண்ட பக்கம் என்று வழக்கறிஞர்கள் கூறும்போது பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் எழுத்தில் அடங்கா துக்கத்திற்கு உள்ளாகினர்.

செப்டம்பர் மாதம் 2020, ஏழு மாத நீதிமன்ற விசாரணைகளுக்கு பிறகு அன்று தீர்ப்பு வழங்கப் போகும் நாள். விடியற்காலை முதலே மக்கள் கோர்ட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.. ஒருவரும் நீதிபதியின் வாயிலிருந்து வரும் ஒரு வார்த்தையும் தவறவிட விரும்பவில்லை….

நீதிபதி டோனி தீர்ப்பளிக்க ஆரம்பித்தார்.

தான்யாவின் மரணத்தை காவல்துறையினர் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபிக்க தவறியதால் அந்த வழக்கில் டோனல்ட் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்தார்.

இது காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் தான்யாவின் குடும்பத்தாருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தாலும்… உடல் கண்டுபிடிக்கப்படாததால் தான் இந்த தீர்ப்பு என்று அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. மற்ற இரண்டு பெண்களின் கொலைகளிலும் டோனால்ட் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான்.

கிட்டத்தட்ட 24 வருட துயரம், வேதனை, நகரத்தின் பயம், பெண்களின் பாதுகாப்பின்மை எல்லாம் ஒருங்கே முடிவுக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தாரின் பத்திரிகை பேட்டி அதிர்ச்சி துக்கம் இயலாமை இவைகள் கலந்த ஒரு பெரும் பெருமூச்சாக இருந்தது.

டிசம்பர் 23, 2020 தேதியன்று டொனால்ட் பிணை இல்லாத வாழ்நாள் சிறைவாசம் பெற்றான்.

தான்யாவின் உடல் கிடைக்காதவரை தான்யாவின் பெற்றோர்களுக்கு முடிவும் இல்லை…. நிம்மதியும் இல்லை.

தான் குற்றவாளி இல்லை என்பதும், அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டவன் என்பதும் அதனால் பல வருடங்கள் மன உளைச்சலுக்கு தானும் தன் குடும்பத்தாரும் ஆளானது வீணே என்பதும் அறியாமல் சார்லஸ் இரு வருடங்களுக்கு முன்பு இறந்தது மிகவும் வருத்தமான ஒன்று.

நேர்மை இன்னும் எல்லாத்துறைகளிலும் வாழும் நாட்டில்…….

“அறிவியல் முன்னேற்றம் குற்றம் செய்தோரை நின்று கொல்லும்”

bottom of page