அந்த பதினெட்டு நொடிகள்! By சிவா.
- melbournesivastori
- Jun 7, 2021
- 2 min read
எவ்வளவு கட்டுப்பாடுகள்; எவ்வளவு முன்னெச்சரிக்கைகள் இருந்தும் என்ன பயன் யார் நினைத்து பார்த்து இருப்பார்கள் 70 லட்சம் பேர்கள் முடங்கி இருக்கவேண்டுமென்று……
எல்லாம் ஒரு திரில்லர் கதையை போல் நடந்து விட்டது… ஒரு இந்தியரால் தன்னையறியாமலேயே இது நிகழ்த்தப்பட்டது. ஒரு மாநிலமே தத்தளிக்க போகிறது என்று அவருக்கு அப்போது தெரியாது,
இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய நகரமான அடிலெயிட்க்கு வந்து இறங்கினார். ஓட்டலில் 14 நாட்கள் குவாராண்டினில் இருக்கவேண்டும் மெல்போர்ன் செல்வதற்கு முன்பு…. கிட்டத்தட்ட முடியும் தருவாய் .. இன்னும் சில நாட்களே மெல்பர்ன் செல்வதற்கு..
‘விதி யாரை விட்டது’ என்று சொல்வதற்கு பதிலாக இப்போது கொரோனா யாரை விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
70 லட்சம் பேரை முடக்கப் போகும் அந்த நிகழ்வு… அந்த நொடிகள்…. நடந்தேறியது மே 3ஆம் தேதி. எல்லாம் நல்லபடியாக தான் நடந்து கொண்டிருந்தது.. அவர் தங்கியிருந்த நாட்களில் நாட்கள் 1,5 & 13 ல் அவருக்கு கோவிட் டெஸ்ட் எடுக்கப்பட்டது…. எல்லாமே நெகட்டிவ். இன்னும் ஒரு நாளில் எல்லாம் முடிந்து விடும் மெல்போனுக்கு செல்லலாம் என்று மிகவும் ஆவலாக இருந்தார். அவர் இருந்தது அந்தப் பகுதியின் கடைசி அறை..
14 நாட்கள் முடிந்து விட்டது மிகவும் ஆவலாக மே 4ஆம் தேதி மெல்போர்னுக்கு பறந்து சென்றார். குடும்பம் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அவர்கள் இருந்தது மெல்போர்னில் வடக்குப்பகுதி… இவ்வளவு நாட்கள் கழித்து வந்தது கொடுத்த மகிழ்ச்சியில் இந்திய உணவகத்திற்கு சென்று குடும்பமே உணவு அருந்தினர். அன்று முதல் எல்லாம் சராசரி நாட்களைப் போன்று நடந்தது.. வேலைக்குச் சென்றார்.. வேலையை முடித்து புட்பால் ஸ்டேடியத்திற்கு சென்றார்… ஆனால் மே 8ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் போக ஆரம்பித்தது… கோவிட்டுக்கான எல்லாவிதமான அறிகுறிகளும் தென்பட ஆரம்பித்தது.. மறுநாள் சோதனைக்கு சென்றார் மே 11ஆம் தேதி பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது…. குடும்பமே ஆடிப் போய் விட்டது. கொரோனாவின் கோரத்தாண்டவம் துவங்கியது…. வீட்டில் இருந்த மற்ற மூவருக்கும் கொரோனா வந்தது…
நூற்றி அறுபது நாட்களுக்கு மேல் கோரானாவின் பாதிப்பே இல்லாமல் இருந்த விக்டோரியா மாநிலமும் மெல்போர்ன் நகரமும்.. லேசாகத் திணற துவங்கியது. அவர் வேலைக்குச் சென்ற இடத்தில் ஐந்து பேருக்கு… இவர்கள் பரப்பியது மிகவும் அதிகம்…. மற்றும் பார்க்கச் சென்ற இடத்தில் சிலருக்கும் கொரோனாவின் பாதிப்பு துவங்கியது… பொய்ச் செய்திகளும் புரளி களும் காட்டு தீ போல் பரவியது என்று சொல்வது சாதாரணமாக தெரிகிறது இந்த கொரோனாவின் அதிதீவிர பரவலை பார்த்தால் . அரசாங்கம் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கத் துவங்கியது…. மே 26 ஆம் தேதி வரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த சங்கிலித் தொடரில் தொடர்புடையவர்களாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டனர். 150 இடங்கள் கவனிக்கப்படவேண்டிய இடங்களாக அறிவிக்கப்பட்டது.
மே 27 ஆம் தேதி விக்டோரியா அரசாங்கம் சுகாதார அமைப்புடன் மேல்மட்ட குழுவில் மிகத் தீவிரமாக ஆலோசனை செய்து.. அன்றிரவு 12 மணி முதல் 7 நாட்களுக்கு சில தளர்வுகளே உள்ள ஊரடங்கு பிறப்பித்தனர்.
5 காரணங்களுக்காக மட்டுமே யாராக இருந்தாலும் வெளியே செல்லலாம்.

இதற்கிடையில் அரசாங்கம் தலையை பிய்த்துக்கொண்டது… எப்படி மாநிலத்திற்குள் இந்த கோவிட் வந்தது என்று….
இவை எல்லாவற்றுக்கும் காரணமான கோரோணா கொடுத்த அந்த 18 நொடிகள் அரவணைப்பை பற்றி சொல்கிறேன்…
மே 3ஆம் தேதி அந்த இந்தியரின் தனிமைப்படுத்துதலின் கடைசிக்கு முன் நாள் ….. அவர் அறைக்கு முன்பு உணவு வைக்கப்பட்டிருப்பதாக வந்த போன் காலை முன்னிட்டு கதவைத் திறந்து வைத்திருந்த உணவை எடுத்தார் சரியாக 18 நொடிகள் கதவு திறந்து மூடப்பட்ட இடைவெளி….
இந்தப் பதினெட்டு நொடிகள் சாதாரணமாக தான் தெரிந்தது…. 70 லட்சம் மக்களின் சாபக்கேடு அங்கிருந்துதான் துவங்கியது…
அந்தப் பதினெட்டு நொடிகளில் தானா பக்கத்து அறையில் இருந்த கோவிட் பாசிட்டிவ் நோயாளி கதவை திறந்து அவருடைய உணவையும் எடுக்க வேண்டும்?
அந்த சமயத்தில் அந்த நோயாளி விட்ட மூச்சுக்காற்றுதான் இவ்வளவுக்கும் காரணம்.
இவ்வளவு அதிபயங்கரமான தொற்றை தயவு செய்து நீங்கள் எல்லோரும் மிக மிக கவனமாக அணுகுங்கள்.