About Melbourne Siva Stories
எல்லோருமே நிர்வாணமாக இருக்கும் ஒரு ஊரில் ஒருவன் மட்டுமே உடை அணிந்திருந்தால் அவனை பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்….
ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்தால் அது போன்று தனித்து நிற்கும் ஒருவராலேயே பல்லாயிரக்கணக்கான மனித பரிணாம நாகரீக வாழ்க்கை பயணத்தில் புரட்சி; எழுச்சி; தன்னம்பிக்கை; மாற்றம் இவைகளையெல்லாம் உருவாக்க முடிந்திருக்கிறது. மக்களுக்கு இது போன்றவைகள் தான் பிடிக்கும் என்று எழுதுவதைவிட… என்னுடைய எழுத்துக்கள் ஏன் பிடிக்காது என்று நினைத்து எழுதத் தொடங்கினேன்… இதில் உள்ள கதைகள் உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ காலம்தான் சொல்ல வேண்டும். இந்தக் கதை களத்தில் உள்ள கதைகள் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
நான் சிவா மெல்போர்னிலிருந்து…..
தமிழ் மீது கொண்ட தீராத பற்றுதலால் இந்த முயற்சியை துவங்கி உள்ளேன். ஆதரவு தந்து ஊக்கம் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மிக்க நன்றி!
Contact
Get in touch to discover more writings by Melbourne Siva Stories and to follow their literary adventures.